உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் முகாம்

கோவை: அவிநாசி ரோடு, மண்டல அறிவியல் மையத்தில், பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை அறிவியல், வானவியல் முகாம் வரும், 29ம் தேதி துவங்குகிறது. ஆண்டுதோறும், அறிவியலின் நுணுக்கங்கள், தொழில்நுட்ப பயன்பாடு, நடைமுறை வாழ்வியலில் உபயோகிக்கும் முறை குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு, அடிப்படை அறிவியலின் கருத்தாக்கம், வானவியல் ஆய்வு குறித்து முகாமில் விவரிக்கப்படும். ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். தவிர, காகித மடிப்பு கலை குறித்த பயிற்சியும் அளிக்க உள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், சேர்க்கை கட்டணம் ரூபாய், 300 செலுத்தி, 28ம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422- 2570325/2573025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்