உள்ளூர் செய்திகள்

பல்கலை மாணவர்கள் போராட்டம் வாபஸ்

நாகமலை: மதுரை காமராஜ் பல்கலையில் நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகையை வழங்கக் கோரி பதிவாளர் அறையை ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். பல்கலை மானியக் குழு சார்பில் பிஎச்.டி., பதிவு செய்த மாணவர்களுக்கு 2013 முதல் கல்வி உதவி தொகை (நான் நெட் பெல்லோஷிப்) வழங்கப்படுகிறது. மாணவர் பலருக்கு இத்தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஏற்கனவே மாணவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களிடம் பல்கலை பேச்சுவார்த்தை நடத்தி உதவி தொகை அளிப்பதாக உறுதியளித்திருந்தது. இந்நிலையில், நேற்றும் மாணவர்கள் பலர் பதிவாளர் அறையை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பதிவாளர் முத்து மாணிக்கம் (பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்படிக்கை ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்