உள்ளூர் செய்திகள்

கல்லூரி பேராசிரியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு

ஊட்டி: கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள அரசு கல்லுாரி உதவி பேராசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கோவையில் உள்ள கல்லுாரி இணை இயக்குனர் அலுவலகம் முன் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன்படி, ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 68க்கும் மேற்பட்ட நிரந்தர உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்; அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து, கோவையில் நடந்த முற்றுகையில் பங்கேற்க சென்றனர். இதனால், வகுப்புகள் பாதித்தன; இருப்பினும், கல்லுாரியில் பணிபுரியும், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்