உள்ளூர் செய்திகள்

வில்வித்தை போட்டிக்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி: மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்க, விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுளளது. புதுச்சேரி விற்கலைக்கழக பொதுச்செயலாளர் கோடீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜார்கண்ட் மாநிலத்தில், வரும் ஏப்., 8ம் தேதி முதல் 11 வரையில் மாநில அளவிலான 23வது வில்வித்தை போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும், சீனியர் அளவிலான விளையாட்டு வீரர்கள், வரும் 20ம் தேதிக்குள், தங்கள் பெயரை புகைப்படத்துடன் pondicherry.archery@yahoo.com என்ற இ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு பயிற்சியாளரை, 97519-09189 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்