விரும்பும் மையங்கள்; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் ஆசிரியர்கள் விரும்பும் மையங்களில் விடைத்தாள் திருத்த அனுமதிக்க வேண்டும்,&' என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமியிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் உக்கிரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு: திருநகர் சீதாலட்சுமி, ஒத்தக்கடை பெண்கள் மற்றும் கருமாத்துார் புனித கிளாரட் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் செயல்படுகின்றன. கல்வி மாவட்டங்கள் வாரியாக அல்லாமல், ஆசிரியர்கள் விரும்பும் மையங்களில் விடைத்தாள் திருத்த அனுமதிக்க வேண்டும். அடிப்படை வசதி செய்ய வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கு முதன்மை மற்றும் கூடுதல் முதன்மை (எஸ்.ஓ.,) பணிகள் ஒதுக்க வேண்டும். தினமும் மாலை 6 மணிக்குள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விடைத்தாள் வழங்க வேண்டும், என வலியுறுத்தி இருந்தனர்.