உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலை அறிவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., ஏழு நாள் சிறப்பு முகாம், ராமநாதபுரம் கிராமத்தில் துவங்கியது. கல்லுாரி புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியர் விஜயரகுநாதன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் குமரன் முகாமை துவக்கி வைத்து, என்.எஸ்.எஸ்.மாணவர்கள் நடத்திய முகாமில் மரக்கன்று நடுதல், பேரணி, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கினார்.அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி, தன்னார்வலர்களுக்கு இதுபோன்ற முகாம் குழுவாக சேர்ந்து பணியாற்றும் பக்குவத்தை கொடுக்கிறது என கூறினார். என்.என்.எஸ். மாநில இணைப்பு அலுவலர் குழந்தைசாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவபாலன், கிராம நிர்வாக அதிகாரிகள் ஜெயசந்திரிகா, தனலட்சுமி வாழ்த்திப் பேசினர். வினோதினி நன்றி கூறினார்.சிறப்பு முகாமில், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி, அரிக்கன்மேடு களப்பணி, சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி, ரத்ததான முகாம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்