உள்ளூர் செய்திகள்

சி.எஸ்.சி., ’சாட்’ ஸ்காலர்ஷிப் தேர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள, சி.எஸ்.சி., கணினி கல்வி நிறுவனத்தின், 430 மையங்களிலும், வரும் ஏப்., 3ம் தேதி, சாட் ஸ்காலர்ஷிப் தேர்வு நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு, கணினி கல்வி கட்டணத்தில், 75 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் சலுகை வழங்கப்பட உள்ளது. அன்று காலை, 8:00 முதல், பிற்பகல், 1:00 மணிக்குள், ஏதாவது ஒரு, 15 நிமிடத்தை தேர்ந்தெடுத்து, தேர்வு எழுதலாம்.தேர்வில், பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும். பங்கேற்க கட்டணம் கிடையாது. விருப்பம் உள்ளோர், அருகில் உள்ள சி.எஸ்.சி.,யின் கிளைகளை, ஏப்., 3ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, இலவச அனுமதி அட்டையை பெறலாம். அனுமதி அட்டையை முன்பே பெற முடியாதோர், தேர்வு நடக்கும் அன்று, சி.எஸ்.சி., பயிற்சி மையத்தில் அனுமதி அட்டையை பெற்று, உடனடியாக தேர்வில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்