உள்ளூர் செய்திகள்

அறநெறி கல்விக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்பூர்: உலக சமுதாய சேவா சங்கம், திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை இணைந்து, மாணவர்களுக்கான யோகமும் இளைஞர் வல்லமையும் என்ற அறநெறி பண்பாட்டுக் கல்வியை பயிற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஏ.வி.பி., கல்வி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டது. ஒப்பந்தத்தில், விஷன் பார் விஸ்டம் இயக்குனர் பெருமாள், ஏ.வி.பி., கல்வி நிறுவன தாளாளர் அருள்ஜோதி கார்த்திகேயன் ஆகியோர் கையெழுத்திட்டனர். உலக சமுதாய சேவா சங்க திருப்பூர் மண்டல செயலாளர் முரளிதரன், ஏ.வி.பி., கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் முத்துசாமி, பிரியா, கருப்புசாமி, அறக்கட்டளை துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் பூபதிராஜன் மற்றும் உத்தமன், தேவராஜன், தங்கவேலு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதேபோல், சக்தி விக்னேஷ்வரா கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது; தாளாளர் மைலாவதி, பள்ளி முதல்வர் சக்தி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எஸ்.கே.எல்., பப்ளிக் மேல்நிலைப்பள்ளியிலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் கோவிந்தசாமி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, திருப்பூர் மண்டல உலக சமுதாய சேவா சங்க செயலாளர் முரளிதரனிடம் அளித்தார். பொறுப்பாசிரியர் ஜைத்தூன் பேகம், அறங்காவலர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் குமாரி, தாளாளர் கோவிந்தசாமி, பொருளாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் சிவகுமார், கல்வி பொறுப்பாளர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்