உள்ளூர் செய்திகள்

மாணவர்களிடையே தேசப்பற்றை போதிக்க வேண்டும்!

பந்தலுார்: மாணவர்கள் மத்தியில் தேசப்பற்றை போதிப்பவர்களாக, ஆசிரியர்கள் மாற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. பந்தலுார் அருகே, அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி மகா வித்யாலயா வளாகத்தில், சிறந்த ஆசிரியர்; சிறந்த பள்ளி எனும் தலைப்பில் ஐந்து நாட்கள், பயிற்சி முகாம் நடந்தது. சென்னை வேதாபிரகாசம், வேதா அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் சுரேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பெங்களூரு விவேகானந்தா யோகா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுப்ரமணியம் பேசியதாவது: பள்ளிகளில், ஆசிரியர்கள் சிறந்த முறையில், செயல் படவும், சிறந்த பள்ளியை உருவாக்கும் நோக்கமாக, ஆண்டுதோறும் கோடை காலத்தில், இது போன்ற சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் சிறப்பான முறையில் செயலாற்றுவது; அவர்களுக்கான பொறுப்புணர்வு, கட்டுப்பாடான வாழ்க்கை, நினைவாற்றலை அதிகரிப்பது; சிறந்த கையெழுத்து, வாழ்க்கை கல்வி; சிறந்த முறையில் கல்வி போதிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் வெறும் ஏட்டு கல்வியை மட்டுமே போதிக்காமல், மாணவ சமுதாயத்தில் தேசப்பற்றை போதிப்பவர்களாக மாற வேண்டும். இவ்வாறு சுப்ரமணியம் பேசினார். தரமான கல்வி குறித்து, சென்னை அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் பத்மாஸ்ரீநாத்; வளர் இளம் பருவ கல்வி குறித்து, வேதா அகாடமி தலைவர் வேதாஸ்ரீதரன்; பசுமை உலகம் குறித்து சங்கரநாராயணன் குழுவினர்; இயற்கை முறையிலான விவசாயம் மூலம் உடல் நலன் பேணுதல் குறித்து, பசுராகவன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில், தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த,105 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேதா அகாடமி நிர்வாகி கடம்பவேலு, பள்ளி நிர்வாக குழுவை சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்