உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு பயிற்சி; கல்லூரியில் துவக்கம்

கோவை: கோவை வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லுாரியில் மாணவர்களின் வேலைவாய்ப்புகாக, ஒரு வார கால தொடர் பிரத்யேக வேலைவாய்ப்பு பயிற்சிகள் நேற்று துவங்கியது. இப்பயிற்சி முகாமை, கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மகேஸ்வர் மற்றும் எம்.பி.ஏ., மேலாண்மை பிரிவு இயக்குனர் ராஜ்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். பயிற்சிகளை, தொடர்பு திறன் பயிற்சித்துறை தலைவர்கள் ஸ்வாதிக்கா, அசோக்குமார் வழங்கவுள்ளனர்.&'பயிற்சியின் போது, மாணவர்களுக்கு ஆங்கில மொழி மேம்பாடு, பேச்சுத்திறன், உள்ளிட்ட வேலைவாய்ப்புக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், மூன்றாம் ஆண்டு படிப்பை நிறைவுசெய்யவுள்ள, 900 மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு பயிற்சியை, தொடர்ந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்