ஜி.கே.டி., பள்ளிக்கு கலாசார விருது
கோவை: டில்லி ஹெரிடேஜ் கிளப் அமைப்பு, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய பண்பாடு, கலாசாரம், குறித்த விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர, தேசிய அளவில் கல்வி நிறுவனங்களில் முக்கிய தலைப்புகளில் கலாசாரம் தொடர்பான போட்டி களையும் நடத்தி வருகிறது. இதில், 2016 ஆண்டுக்கான போட்டியில் கலாசாரம் தொடர்பான சிறந்த செயல்திட்டத்தை வழங்கியதற்காக, சிறந்த கலாசார பள்ளி விருது, ஜி.கே.டி., பள்ளிக்கு வழங்கப்பட்டது. மேலும், ஹெரிடேஜ் கிளப்பின் சிறந்த மாணவியாக இப்பள்ளியை சேர்ந்த பவர்ணா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ரொக்கப்பரிசு, விருதை பள்ளியின் முதன்மை செயலாளர் பிரசன்னா பெற்றுக் கொண்டார்