உள்ளூர் செய்திகள்

டில்லியில் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

டில்லி மாநில அரசின் ‘அம்பேத்கர் பல்கலைக்கழகம்’ இந்த ஆண்டு செப்டம்பர் முதல் செயல்படவுள்ளது. டில்லியில் தொடங்கப்பட்டுள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஹுமானிட்டீஸ் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் ‘டெவலப்மென்ட் ஸ்டடீஸ்’ போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்பை மட்டும் வழங்கி வந்தது. இந்த ஆண்டு மூன்று புதிய முதுநிலை படிப்புகளை தொடங்கவுள்ளது. டெவலப்மென்ட் ஸ்டடீஸ், சைக்காலஜி, என்விரான்மென்ட் அண்டு டெவலப்மென்ட் ஆகிய பிரிவுகளில் எம்.ஏ., படிப்பை வழங்கவுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 15 பேருக்கு ஒன்று என்ற அளவில் மாணவர் ஆசிரியர் விகிதம் இருக்கும். குறிப்பிட்ட படிப்பை நடத்த ஆகும் செலவு, படித்த பின் கிடைக்கும் வேலைவாய்ப்பு, மாணவரின் பொருளாதார பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. தற்போது துவாரகா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகத்துக்கு விரைவில் நசாப்கார் பகுதியில் நிரந்தர வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு புதிய வளாகங்களை தொடங்கவும் இந்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்