ஜி.ஆர்.இ. தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஜி.ஆர்.இ. தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதில் பலர் வெற்றி பெற முடிவதில்லை. போதிய திறன் இல்லாதது இதற்குக் காரணமல்ல. தேர்வு முறைகள் நமக்கு இன்னமும் பரிச்சயமாகவில்லை என்பது தான் உண்மையான காரணம். எனவே ஜி.ஆர்.இ. தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி இப்போது ஆன்லைனில் தரப்படுகிறது. இதனால் நமது மாணவர்கள் இனிமேல் சிறப்பாக இத்தேர்வை எழுத முடியும். அமெரிக்காவில் கல்வி பயில ஜி.ஆர்.இ. தேர்வானது அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இத்தேர்வை பல நாடுகளும் அங்கீகரித்துள்ளன. இத்தேர்வை எழுதவோருக்கான பயிற்சியை அளிப்பதற்கான பிரத்யேகமான இணைய தளமான தீதீதீ.ஞ்ணூஞுஞுஞீஞ்ஞு.ஞிணிட் துவங்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு முதல் இத்தளம் வடிவமைக்கப்பட்டு வந்ததாகவும் இதுவரை 15 ஆயிரம் பேர் இதில் பயிற்சி பெற்றிருப்பதாகவும் தள நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் இத்தளத்தை பயன்படுத்துவதை மில்லிசெகண்ட் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பம் கணக்கிடுகிறது. இதனால் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம், பதில்களை பகுத்தாய்வு செய்வது ஆகியவற்றை அறிந்து அவர்களது மதிப்பெண்களை அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இத்தளத்தின் ஆலோசகர் மாணவர்களின் தனிப்பட்ட பலம் பலவீனங்களை அறிந்து தக்க ஆலோசனைகளைத் தரவிருக்கிறார். இத்தளம் தற்போது ரூ.6 ஆயிரம் கட்டணமாகப் பெறுகிறது. கிட்டத்தட்ட 120 மணிநேர பயிற்சியை இது தருகிறது.