உள்ளூர் செய்திகள்

பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி., தெற்காசியாவில் முதலிடம்!

ஸ்பெயினில் உள்ள சைபர்மெட்ரிக் லேப் என்ற பொது ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரேங்க் பட்டியலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் நூறு ஆண்டுகளை எட்டிப் பிடித்த சிறந்த கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை ஐ.ஐ.டி., பெங்களூரில் உள்ள நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் மையம், கான்பூர் ஐ.ஐ.டி., மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் ஆகியவை இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து, சென்னை ஐ.ஐ.டி., ஹைதராபாத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷள் டெக்னாலஜி, டில்லி ஐ.ஐ.டி., டில்லி பல்கலைக்கழகம், கரக்பூர் ஐ.ஐ.டி., ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.உலக அளவில் அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவிலான பட்டியலில் முதல் 20 இடங்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே பிடித்துள்ளன.உலகம் முழுவதும் உள்ள 15 ஆயிரம் பல்கலைக்கழகங்களைப் பரிசீலனை செய்து அதிலிருந்து 5 ஆயிரம் பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு வரிசைபடுத்தப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் இந்த ரேங்க் பட்டியல் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சைபர்மெட்ரிக் லேப் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்