உள்ளூர் செய்திகள்

கிராமங்களுக்கு போறாங்க எம்.பி.ஏ., பட்டதாரிகள்!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட செயல்பாடு குறித்து விவாதிக்க, மத்திய கிராம மேம்பாட்டு அமைச்சர் ஜோஷி தலைமையில் மத்திய வேலைவாய்ப்பு உறுதித் திட்ட கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜோஷி, இந்த சூப்பர் திட்டத்தை அறிவித்தார். கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எம்.பி.ஏ., பட்டதாரிகளை ஊராட்சி மேம்பாட்டு அதிகாரியாக நியமிக்கலாம். அவர்களுக்கு மத்திய அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் வழங்கலாம். இவர்களின் நியமனம் மட்டும் மாநில அரசுகள் மூலம் நடைபெறும், ஊராட்சிஊராட்சிகளின் பொறுப்பு அதிகரித்தபடி இருப்பதால் தகுதி வாய்ந்த நபர்களை நியமித்து நிர்வாகத்தைப் பலப்படுத்துவது அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார். தேசிய, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கென மத்திய அரசு நிதியளித்து வருகிறது. ஆனால், திட்டத்தை நிர்வகித்துச் செய்ல்படுத்த தகுதி வாய்ந்த ஊழியர்கள் இல்லை., இதனால், திட்டத்தின் முழுப் பலன், உரியவர்களைச் சென்றடையவில்லை என்றும் அமைச்சர் ஜோஷி குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்