இன்ஜி., ஆன்லைன் வகுப்பு துவக்கம்
இன்ஜி., கல்லுாரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்குகின்றன. கொரோனா காரணமாக, மார்ச் மாதம் முதல் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அண்ணா பல்கலை நடப்பு செமஸ்டர் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணையை கடந்த வாரம் வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில் இன்று (12ம் தேதி)முதல் ஆன்லைனில் வகுப்புகளை துவங்க உத்தரவிட்டுள்ளது. செமஸ்டர் வகுப்புகளை அக்., 26க்குள் முடிக்க வேண்டும். செய்முறை தேர்வுகளை அக்., 28ல் துவங்கவும், பருவ தேர்வுகளை நவ., 9ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிச., 14ல், நடப்பாண்டின் இரண்டாவது செமஸ்டர் வகுப்புகள் துவங்க வேண்டும்; அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடக்கும் என்றும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.