அரியர்ஸ் விவகாரம் ஸ்டாலின் யோசனை
சென்னை: அரியர்ஸ் மாணவர்கள் விவகாரத்தில் தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:அரியர்ஸ் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளிக்க பல்கலை மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் விதிமுறைகள் இடம் தராது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவும் &'அகில இந்திய தொழில்நுட்பகவுன்சில் இதை ஏற்கவில்லை&' என தெரிவித்துள்ளார்.சூரப்பாவுக்கு அகிலஇந்திய தொழில் நுட்ப கவுன்சில் எழுதிய கடிதத்தில் &'தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அளிக்காமல் தேர்ச்சி என்பது ஏற்க முடியாது&' என கூறப்பட்டுள்ளது. எனவே கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம். கல்லுாரி மாணவர்கள் நியாயமான தகுதியான அடிப்படையில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.