இணையவழி தொல்காப்பிய பயிலரங்கம் துவக்கம்
சென்னை; தமிழின் இலக்கண நுாலான தொல்காப்பியத்தின் பொருளதிகாரம்குறித்த பயிலரங்கம், இன்று முதல் இணைய வழியில் நடக்கிறது.திருவையாறு, ஐயாறப்பர் திருமுறை மன்றமும், சிங்கப்பூர், நம் தமர் ஊரன் இலக்கிய ஆராய்ச்சி மையமும் இணைந்து, தொல்காப்பிய பொருளதிகாரம் குறித்த பயிலரங்கத்தை, இணையவழியாக, இன்று மாலை துவங்கி, 12 நாட்கள் நடத்துகின்றன. பயிலரங்கத்தை, திருவையாறு அரசர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சண்முக.செல்வகணபதி நடத்துகிறார். இன்று முதல் தினமும் மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை, இந்த பயிலரங்கம் நடக்கும். அதாவது, 6, 7, 10, 13, 14, 17ம் தேதிகளைத் தவிர்த்து, வரும், 19ம் தேதி வரை, 12 நாட்கள் நடக்கிறது. 12 நாட்களும் பயிலரங்கத்தில் பங்கு பெறுவோருக்கு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு வகுப்பு முடிந்த பின்னும், அன்றைய வகுப்பில் தெரிந்தவற்றை, ஒரு பக்க அளவில் கட்டுரைகளாக்கி, aiyarappar.tmt@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பயிற்சியில் பங்கேற்போர், தொல்காப்பிய பொருளதிகாரம் நுாலோடு இணைவது பலனைத் தரும். பயிலரங்கத்தில் இணைய, www.youtube.com/channel/ UC5cs P4Dy8SYQw7j ZDB6P6eQ, www.facebook.com/aiyarappar.tmt.9, www.youtube.com /channel/UCGHM-nTXKZOM8o-9mno8eZw என்னும் இணைப்புகளில் தொடரலாம்.