விரிவுரையாளர்களுக்கு வழி அனுப்பும் விழா
திருக்கனுார் - பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிட மாற்றம் பெற்ற விரிவுரையாளர்களை வழி அனுப்பும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய 12 விரிவுரையாளர்கள் இடமாற்றம் பெற்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில், அவர்களுக்கு வழி அனுப்பும் விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் பணியிட மாற்றம் பெற்ற விரிவுரையாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.