உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான ஒரு நாள் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் பண்ணையில் நடந்த முகாமிற்கு கல்லுாரி முதல்வர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தாவரவியல் துறை தலைவர் நாயக் முன்னிலை வகித்தார். பேராசிரியர் குமரேசன் வரவேற்றார். வணிகவியல் துறை பேராசிரியர் கோச்சடை நோக்கவுரையாற்றினார். அறிவியல் மன்ற இயக்குனர் அருண் நாகலிங்கம், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் காளான் வளர்ப்பு மற்றும் மண் புழு உரம் தயாரித்தல் குறித்து விளக்கினர். பயிற்சி முகாமில் பேராசிரியர்கள் ஜானகி, ஆனந்தி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் விக்ராந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்