பொதுத்தேர்வை எதிர்கொள்ள திறன்மேம்பாட்டு பயிற்சி
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, பொதுத்தேர்வை எதிர்கொள்ள திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஓசூர், வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், தேன்கனிக்கோட்டை அடுத்த பாண்டுரங்கன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது எவ்வாறு, என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில்,10ம் வகுப்பு படிக்கும், 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு, தனித்திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சியாளர் செல்வராஜ், உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கினார். மேலும், பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது எப்படி, அதிக மதிப்பெண் பெறுவது எவ்வாறு, தேர்வு முடிந்த பின், தேவையில்லா மனக்குழப்பம் அடைவதை தவிர்ப்பது எப்படி என, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.