முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
புதுச்சேரி: தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.ஆச்சார்யா பள்ளிக் குழும தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். ஸ்ரீபாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக துணைவேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா பங்கேற்று, மாணவர்கள் எதிர்கால குறிக்கோள்களின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார். பள்ளி முதல்வர் கவிதா, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியின் சிறப்புகள், ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்கள் காணொளி மூலம் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் பள்ளி இணைப்பு சங்க தலைவராக சபரிஷ், செயலாளராக நிவேதா, பொருளாளராக ஹரிராம் நியமிக்கப்பட்டனர்.