உள்ளூர் செய்திகள்

நுழைவு தேர்வுகளை நீக்க வலியுறுத்தல்

அவரது அறிக்கை:நாடு முழுதும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளை நடத்த, மத்திய அரசு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா அச்சத்தில் உள்ள மாணவர்கள், ஆகஸ்டில் நடைபெறும், &'நீட்&' தேர்வுக்கு தயாராவது சாத்தியமில்லை.எனவே, தேசிய அளவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும், நடப்பாண்டில் ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் வழங்கியுள்ள, மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்து படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.விசாரணை தேவை&'டுவிட்டர்&' பக்கத்தில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:வண்டலுார் உயிரியல் பூங்காவில், சிங்கங்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு சிங்கம் உயிரிழந்து விட்டதாகவும் வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சிங்கங்களிடம் இருந்து, பிற விலங்குகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.வண்டலுார் உயிரியல் பூங்கா, பல வாரங்களாக மூடப்பட்டு இருக்கிறது; பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பயிற்சியாளர்களும், உணவு வழங்கும் பராமரிப்பு குழுவினர் மட்டுமே விலங்குகளை நெருங்க முடியும் என்ற நிலையில், அவற்றுக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது?விலங்குகளை பராமரிக்கும் குழுவினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டதா; தடுப்பூசிகள் போடப்பட்டதா; அவர்கள் வாயிலாக சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்கலாமா என்பது குறித்த விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்