உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் ஆன்லைன் சிண்டிகேட்

பாரதியார் பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் உட்பட முக்கிய பணியிடங்கள் அனைத்தும் காலியாகவுள்ளன. பேராசிரியர்கள் வசம் கூடுதல் பொறுப்பாக விடப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் பொறுப்பு குழுவும், பெயரளவில் செயல்படுவதால், பெரும்பாலான பணிகள் தேங்கியுள்ளன. சிண்டிகேட் கூட்டமும், கடந்த ஐந்து மாதங்களாக நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று ஆன்லைன் வழியாக கூட்டம் நடத்தப்பட்டது. உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் பங்கேற்று, பல்வேறு நிலுவை செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.புதிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேற்றைய கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக சிண்டிகேட் உறுப்பினர்கள் தெரிவித்தனர். வழக்கமாக ஒரு திட்டம், சிண்டிகேட் ஒப்புதல் பெற்ற பின்னரே செயல்படுத்தப்படும். கடந்த ஓராண்டாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்தில் அவற்றுக்கு பின்னேற்பு அனுமதி கோரப்பட்டதற்கு உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்