உள்ளூர் செய்திகள்

நீட் ல் சாதிக்கும் தமிழகம்

கடந்த 2022ல், 400க்கும் 499க்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை, 4,293 ஆக இருந்தது. இந்தாண்டு, 7,833 பேர் இத்தகைய மதிப்பெண் பெற்று தேர்வாகி உள்ளனர். அடுத்ததாக 500 - 599க்கு இடைப்பட்ட மதிப்பெண்களை, கடந்தாண்டு 3,517 பேரும், இந்தாண்டு 4,882 பேரும் பெற்றுள்ளனர். அடுத்து, 600 - 649க்கு இடைப்பட்ட மதிப்பெண்களை, கடந்த ஆண்டு 754 பேர் பெற்றனர். இந்தாண்டு 1,133 பேர் பெற்றுள்ளனர்.அதற்கு மேல் 650 - 699க்கு இடைப்பட்ட மதிப்பெண்களை கடந்த ஆண்டு 194 பேரும் இந்தாண்டு 355 பேரும் பெற்றுள்ளனர். சாதனை படைக்கும் வகையில் 700 - 720 மதிப்பெண் அளவில் கடந்தாண்டு ஐந்து பேரும், இந்தாண்டு 31 பேரும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களின் அறிவுத் திறனை, அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்துவதை இனியாவது நிறுத்த வேண்டும் என நீட் கேள்வி தயாரிப்போர் கூறுகின்றனர். மேலும் நீட் தேர்வு துவங்கிய 2019 ம் வருடத்திலிருந்து 2023 வருடம் வரை தமிழகத்திலிருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது,தேர்ச்சி அடைந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புநீட் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிரித்துள்ளது. சென்ற ஆண்டு மொத்தம் 57,215 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 78,693 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்