உள்ளூர் செய்திகள்

நுாலகம் அமைக்க மக்கள் கோரிக்கை

வால்பாறை நகரில் முழுநேர நுாலகமும், சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகமும் செயல்படுகிறது. பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் நுாலகம் இல்லை. ஆரம்ப காலத்தில் எஸ்டேட் பகுதியில் இயங்கி வந்த மனமகிழ்மன்றமும் தற்போது இல்லை. இதனால், இளைஞர்கள் அன்றாட நாளிதழ்கள் வாசிக்க முடியாமலும், நுால்களை படிக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர். எனவே, கருமலை, ரொட்டிக்கடை, முடீஸ், சின்கோனா பகுதிகளில், பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்