உள்ளூர் செய்திகள்

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

இது குறித்து, இசைப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையில், கிருஷ்ணகிரியில் மாவட்ட அரச இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளி காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை செயல்படும் முழுநேர பள்ளியாகும். இதில், 13 முதல், 25 வயது வரையுள்ள இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம், 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத்துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசு தேர்வுகள் இயக்குனரால் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு, 350 ரூபாய் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு டவுன் பஸ்சில் இலவச பஸ் பாஸ் சலுகை உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும், 400 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இப்பள்ளியில் சேர விரும்புவோர், தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர் ராமாபுரம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்