உள்ளூர் செய்திகள்

விநாயகா மிஷன் பல்கலைக்கு விருது

சென்னை: விநாயகா மிஷன் பல்கலையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த உட்கட்டமைப்பிற்கான விருதை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.விநாயகா மிஷன் பல்கலையின் கீழ், சேலம் விம்ஸ் மருத்துவமனை, சென்னை அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லுாரி, புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரிகளில், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை உள்ளது. இந்நிலையில், குளோபல் ட்ரையம்ப் அறக்கட்டளை சார்பில், மதிப்பீடுகள், ஆராய்ச்சி, கல்வி மற்றும் நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி அடிப்படையில் விருது நிகழ்ச்சி, சென்னையில் சமீபத்தில் நடந்தது. அதில், அமைச்சர் மஸ்தான், எம்.பி., கனிமொழி ஆகியோர் பங்கேற்று, சுகாதாரத்துறையில் சிறந்த உள்கட்டமைப்பிற்கான விருதை விநாயகா மிஷன் பல்கலையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு வழங்கி கவுரவித்தனர்.விருதை பெற்ற கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் கூறியதாவது:கல்லுாரியின் சிறந்த உட்கட்டமைப்பு, மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் எங்களின் முயற்சிகள் ஆகியவற்றை ஆராய்ந்து விருது வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தின் நம்பிக்கையான சிறந்த கல்லுாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விருது பெற சிறப்பாக பணியாற்றிய முதல்வர் செந்தில்குமாருக்கு, பல்கலை வேந்தர் கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன்ஆகியோர் பாராட்டுதெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்