உள்ளூர் செய்திகள்

உலகத்தர கூடைப்பந்து மைதானம் திறப்பு

சென்னை: காவல் துறை விளையாட்டு வீரர்களுக்காக உலகத்தர கூடைப்பந்து மைதானத்தை, அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.காவல் துறை விளையாட்டு வீரர்களுக்காக புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உலகத்தர கூடைப்பந்து மைதானத்தை, அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.தொடர்ந்து 25 வகையான தனி மற்றும் குழு விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள போலீசாருக்கு உபகரணங்களை வழங்கினார். தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், பேட்மின்டன், பளு துாக்குதல், மேசை பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இந்த உபகரணங்கள் பயன்படும். பின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிலம்பாட்டம் நடந்தது. ஒரே நேரத்தில் 1,600 மாணவர்களின் சிலம்பம் நிகழ்ச்சியை நடத்தியதற்காக, வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பினர் வழங்கிய உலக சாதனை விருதை அமைச்சர் உதயநிதி, கூடுதல் காவல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்