உள்ளூர் செய்திகள்

எம்.ஏ., பட்டங்களை பெற்ற பேராசிரியர்

உ.பி., காசிப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்.கே.ராய்(65). கடந்த 67ம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு முடித்தார். அது முதற்கொண்டு தொடர்ந்து 22 எம்.ஏ.,பட்டங்களை பெற்றுள்ளார். வரலாறு, தத்துவம், கல்வி, இந்தி, வர்த்தகம் ஆகிய பாடங்களில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பொருளாதாரம், சம்ஸ்கிருதம், பூகோளம், உளவியல் உள்ளிட்ட பாடங்களில் 22 எம்.ஏ., பட்டங்களை பெற்ற ராய், தற்போது 23வது எம்.ஏ.,பட்டம் பெறுவதற்காக பீகாரில் உள்ள மகத பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். பெரும்பாலான பட்டப்படிப்புகளில் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். "படித்துக் கொண்டே இருப்பது என்னுடைய சுபாவமாகி விட்டது. இந்த விஷயத்தில் என்னை ஊக்குவிக்கும் மனைவி மற்றும் மகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்&' என்கிறார் ராய். இவரை அப்பகுதி மக்கள் "மாஸ்டர்சாப்&' என்றழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்