உள்ளூர் செய்திகள்

கல்விக்கடன் வழங்குவதில் புதுச்சேரி முதலிடம்

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட  கல்வி கடன்களில்,  துணை மாநிலங்கள் வரிசையில், புதுச்சேரியில் தான் அதிகம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவம், இன்ஜினியரிங் உட்பட படிப்புகளுக்கு அரசு துறை வங்கிகள் கல்வி கடன் வழங்கி வருகின்றன. 2008-09ம் நிதியாண்டில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களோடு ஒப்பிடுகையில், புதுச்சேரியில் தான் அதிகம் பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரியில் 100 கோடி ரூபாய் வரை கல்விகடன் வழங்கப்பட்டுள்ளது. கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு நான்கு லட்சம் வரை எந்த வித உத்தரவாதம் இன்றி பெற்றோரது தொழில், உத்தரவாதம் ஆகியவற்றை  அடிப்படையாக கொண்டு கடன் வழங்கி வருகிறது. அதற்குமேல், 7.5 லட்சம் ரூபாய் வரை பெற்றோர் பொறுப்பேற்று உத்தரவாதம் அளிக்கும் சொத்து அடமானம் மற்றும் மூன்றாம் நபர் ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் கடன் வழங்குகிறது. 7.5 லட்சத்துக்கு மேல் உள்ள கடன்களுக்கு மேற்கண்ட உத்தரவாதங்களோடு மாணவர் வருங்காலத்தில் கடன் தொகையை எப்படி கட்டுவார் என்ற உத்தரவாதத்தையும் கேட்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்