சவுதி அரேபியாவில் செவிலியர் பணி
நாமக்கல்: சவுதி அரேபியாவில் பணியாற்ற, பெண் செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம், இரண்டாண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.மேலும், டேட்டா பிளோ மற்றும் ஹெச்.ஆர்.டி., சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை, அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விபரங்கள், இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.comல் பார்த்து பயன்பெறலாம்.மேலும், ஊதியம் மற்றும் பணி குறித்த விபரங்களை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், 95662 39685, 63791 79200, 044 -22505886, -22502267 ஆகிய மொபைல் போன் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், ovemcimohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை அனுப்பலாம். இந்தப்பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவை கட்டணமாக, 35 ஆயிரத்து 400 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.