கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டில் முக்கியத்துவம்
கோத்தகிரி: கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க மத்திய அரசு முக்கியத்துவம் வழங்கி வருகிறது என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பரலட்டி கிராமத்தில், மாவட்ட அளவிலான, கிரிக்கெட் மற்றும் கால்பந்து இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. கிரிக்கெட் இறுதி போட்டியில் தும்மனட்டி அணி மற்றும் எஸ்.என்.வி., அணிகள் மோதின. இதில், தும்மனட்டி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, 14 வயதிற்கு உட்பட்டோர் கால்பந்து இறுதி போட்டியில், ஒன்னதலை அணி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மத்திய இணை அமைச்சர் முருகன் பரிசு மற்றும் கோப்பை வழங்கி பேசுகையில், மத்திய அரசு பிட் இந்தியா திட்டத்தில் இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசை பொறுத்தமட்டில், அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதில் தயாராக உள்ளது என்றார்.