குழந்தைகளுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சத்தால், ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது, ஆண்டுதோறும் டிச., 26ம் தேதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது.புதுமை, விளையாட்டு, கல்வி, சமூக வேலை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சாதனை படைத்த குழந்தைகளுக்கு இவ்விருது வழங்கப்படும். இவ்விருதை பெற தகுதி உள்ள சென்னை மாவட்ட குழந்தைகள், https://awards.gov.in, என்ற இணையதளத்தில், ஆக., 31 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.