உள்ளூர் செய்திகள்

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வேளாண் இணை இயக்குநர் அனுசியா அறிக்கை, இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் நவம்பர் 30ல் பதிவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருப்பதோடு அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு,சான்றிதழ் , பதக்கம் முதல்வரால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2.5 லட்சம், ரூ.10,000 மதிப்புடைய பதக்கம். 2ம் பரிசாக ரூ.1.5 லட்சம், ரூ.7,000 மதிப்புடைய பதக்கம். 3ம் பரிசாக ரூ.1 லட்சம்,ரூ.5,000 மதிப்புடைய பதக்கம் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் பெற்றுக்கொள்ளலாம்,எனக்குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்