உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் இணையவழி படிப்புகள்

பொள்ளாச்சி: பாரதியார் பல்கலை தொலைமுறை கல்விக்கூடம் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில், 11 இணையவழி பட்டப்படிப்புகளுக்கு, குறைந்த கட்டணத்தில் சேர்க்கை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இளநிலை பிரிவில் பி.ஏ., ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ., பி.காம்., முதுநிலை பிரிவில் எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., வணிகவியல், எம்.காம் நிதி மற்றும் கணக்கியல், எம்.ஏ., தொழில் வழிகாட்டுதல், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பிரிவில், 2023 ஜூலை-ஆக., மாதத்திற்கானஅமர்வில் சேர்க்கை நடக்கிறது. இணையவழி பிரிவின் கீழ், விண்ணப்பப்பதிவு முதல், தேர்வு, கற்றல், கற்பித்தல், சான்றிதழ் வழங்குதல் என அனைத்து செயல்பாடுகளும்இணையவழியில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள், வரும்,31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும். மேலும், சேர்க்கை சார்ந்த விபரங்களுக்கு https://b-u.ac.in/என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்