பள்ளிகள் சுயமதிப்பீடு முடிக்க கெடு
கோவை: தேசிய அளவிலான ஆய்வுப்பணிகளுக்காக, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் விபரங்களை சுயமதிப்பீடு செய்து, செப்., 30ம் தேதிக்குள், இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தகவல்களை, ஆய்வுப்பணிகளுக்காக பெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி சார்ந்த தகவல்களை, செப்.,3 ம் தேதிக்குள் பதிவேற்ற, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.