தமிழ் சங்க கட்டடம் திறப்பு
சென்னை: நவி மும்பை தமிழ் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை, அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில், நவி மும்பை தமிழ் சங்கம் செயல்படுகிறது. இச்சங்க கட்டடத்தின் புனரமைப்புக்கு, தமிழக அரசு சார்பில், 1.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. புனரைமக்கப்பட்ட கட்டடத்தை தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவன தலைவர் அன்பழகன் கலந்து கொண்டனர்.