உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்

சென்னை: டில்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்கு, இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி கூறினார்.தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், என்.எஸ்.எஸ்., நாட்டு நலப்பணித் திட்டத்திற்கான மாநில இளைஞர் திருவிழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது. தமிழகத்தில் உள்ள, 4.50 லட்சம் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், தலைமைப் பண்பை வளர்க்கும் வகையிலும், வரும், 28ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அமைச்சர் உதயநிதி பேசுகையில் தமிழகத்தில் இருந்து, குடியரசு தின விழாவுக்கு செல்லும் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், இதுவரை ரயிலில் மூன்று நாட்கள் பயணித்ததால் களைப்படைந்தனர். இனி, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்கு. விமானத்தில் பயணிக்கும் வகையில், இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்