உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்புக்கு ஐ.ஐ.டி., துவக்கும் பட்டப்படிப்பு

இத்திட்டத்தின் கீழ், உலகில் முதல் முறையாக, இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மிண்ணனு அமைப்புகள் பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. இதில், பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையாக படிப்பு டிப்ளமோ பிடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.இதற்கு, ஐ.ஐ.டி.,யால் நடத்தப்படும் ஜெ.இ.இ., நுழைவு தேர்வு கிடையாது. வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோ வாயிலாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள், www.tahdco.com என்ற இணையதளத்தில் உள்ளன. சென்னை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்