காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு - பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வுக்கு, ஒரே பொது வினாத்தாளில் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு, அதற்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளது.ஆறாம் வகுப்பு - 10ம் வகுப்புகளுக்கு, வரும் 19ல் துவங்கி, 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடக்கிறது. அதே போல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, வரும் 15ல் துவங்கி, 27ம் தேதி வரையும் தேர்வுகள் நடக்க உள்ளன. இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.