உள்ளூர் செய்திகள்

வேளாண் மாணவர்கள் கள ஆய்வு

திருபுவனை: மணக்குள வினாயகர் வேளாண் கல்லுாரி மாணவ-மாணவிகள் திருவாண்டார்கோவில் இந்திய உணவுக் கழக சேமிப்பு கிடங்கில் கள ஆய்வு மேற்கொண்டனர்.மதகடிப்பட்டு மணக்குள வினாயகர் வேளாண் கல்லுாரி மாணவ-மாணவிகள் உதவிப் பேராசிரியர் மோகன் முன்னிலையில் திருவாண்டார்கோவிலில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்கில் கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுக்கு கிடங்கின் மேலாளர்கள் இமானுவேல், இன்பராஜ், பிரபுதாஸ், புக்யாவீரயா நேரு ஆகியோர் இந்திய உணவுக் கழக சேமிப்புக் கிடங்கின் செயல்பாடுகளை விளக்கினர்.அவர்கள் கூறுகையில் உணவுக் கழக சட்டம் 1964ன் கீழ் இந்திய உணவுக் கழகம் துவங்கப்பட்டது. அதன் நோக்கங்களில் முதன்மையானது. விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பது மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. பொது வினியோக முறையில் நாடு முழுவதும் உணவு தானியங்களை வினியோகித்தல். தேசிய உணவு பாதுகாப்பை உறுதி செய்வது. உணவு தட்டுப்பாடு இல்லாத நாடாக மாற்றுவதிலும் இந்தியாவின் வெற்றியில் இந்திய உணவுக் கழகத்தின் பங்கு முதன்மையானது. அதற்கு எடுத்துக்காட்டாக கொரோனா- பெருந்தொற்றின்போது மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை போக்க பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது.திருவாண்டார்கோவில் இந்திய உணவுக் கழக தானிய சேமிப்பு கிடங்கில் இருந்து புதுச்சேரி மட்டுமன்றி, விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களிலும் பொது வினியோக திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்