தள்ளுபடி விலையில் புத்தகம் விற்பனை
சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு உள்ள நுால்கள், அக்டோபர் 15 வரை, 30 முதல் 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட, இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் போன்ற தலைப்புகளில் அமைந்த நுால்கள்.பாரதியார் சித்திரக்கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசு போட்டி தேர்வுகளுக்கான நுால்கள், அரிய நுால்கள் ஆகியவை, நேற்று முதல் அக்., 15 வரை, 30 முதல் 50 சதவீதம் கழிவு விலையில் விற்கப்பட உள்ளன.நுால் விற்பனை தினமும் காலை, 10:00 முதல் மாலை 5:30 மணி வரை நேரடியாக நடக்கும். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நுால் விற்பனை நிலையத்திலும், விற்பனை நடக்கும். நுால்கள் குறித்த விபரங்களை, www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.