உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் பீதியடைய வேண்டாம்: கபில்சிபல்

13 மாநிலங்களில் இருக்கும் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ததால் அந்த நிறுவனங்களில் படித்த மாணவர்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கேட்டுக் கொண்டுள்ளார். தாண்டன் தலைமையிலான நிபுணர் குழு நாட்டில் உள்ள 130 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்தது. அதில் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சரியில்லாமல் செயல்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருந்தது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இயங்குவதற்கு சரியில்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளாக மாற்றப்படுமா என்று கேட்டதற்கு, உச்சநீதிமன்றம் முடிவு செய்வதற்கு முன்னதாக நான் எதையும் செய்ய விரும்பவில்லை என்று கபில் சிபல் பதில் அளித்தார்.இதுவரை எந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படவில்லை. எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களின் நலன்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம். இதனால் ஒரு மாணவன் கூட பாதிக்கப்படக்கூடாது. மாணவர்கள் அனைருக்கும் பல்கலைக்கழகப் பட்டம் நிச்சயம்  வழங்கப்படும் என்றும் எனவே யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் கபில் சிபல் கூறினார்.   இந்த வழக்கு வருகிற 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்