துணை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்
சட்டசபையில் நேற்று, நடப்பு நிதியாண்டுக்கு, 2,893.15 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான, முதல் துணை மதிப்பீட்டு அறிக்கையை, அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.சென்னை, கடலுார் மாநகராட்சிகளில், மழை நீர் வடிகால் அமைக்க, 304 கோடி ரூபாய்; 45 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளை சீர்மிகு மையங்களாக தரம் உயர்த்த, 150 கோடி ரூபாய்; சென்னையில், அடையாறு நதி மறு சீரமைப்புக்கு, 139.14 கோடி ரூபாய்க்கு, அரசு கூடுதல் அனுமதி அளித்துள்ளது.