வன்முறை மாணவர்கள் மீது நடவடிக்கை!
சென்னை: வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கல்லுாரிகளின் நிர்வாகங்களுக்கு ரயில்வே போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது.பயணியர் அச்சம்பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், மின்சார ரயில்களின் படியில் தொங்கிய படியும், ஜன்னல்பகுதியில் சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் மாணவர்கள் இடையே, கற்களால் வீசி கொண்டு, தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள், ரயில் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.சமீபத்தில் சென்னை கடற்கரை மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடந்த கல்லுாரி மாணவர்களின் மோதல் சம்பவத்தில், கடும் நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீசார் சார்பில் பச்சையப்பன் மற்றும் மாநில கல்லுாரிகளின் நிர்வாகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:அறிவுரைக்கு பிறகும்மாணவர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டு வருவது, பயணியருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.பரிந்துரைகடற்கரை, பெரம்பூர் ரயில் நிலைங்களில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்களின் வீடியோ, போட்டோக்களை எடுத்து அந்தந்த கல்லுாரி நிர்வாகங்களுக்கு அனுப்பி உள்ளோம். இதில், மாநில கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் 50 பேரின் பட்டியலை, இரு கல்லுாரிகளின் நிர்வாகங்களுக்கும் அனுப்பி உள்ளோம்.இந்த மாணவர்களை டிஸ்மிஸ் அல்லது தற்காலிக நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம். தொடர்ந்து மோதலில், ஈடுபடும் மாணவர்கள் மீது கைது போன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.