உள்ளூர் செய்திகள்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு லேடி டோக் கல்லுாரியில் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் நடந்தது.மாநில துணைத் தலைவர் முத்துலட்சுமி, விலங்கியல் துறை பேராசிரியை மகாலட்சுமி, நாகமலை கிளை தலைவர் ஆண்டனிபால் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் பிரியதர்ஷினி வரவேற்றார். அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் கிம் மாநாட்டை துவக்கி வைத்தார்.மாநாட்டில் 30 பள்ளிகளை சேர்ந்த 236 மாணவர் குழுக்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அவர்களுக்கு முதல்வர் கிறிஸ்டியானா சிங் பரிசு வழங்கினார். தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிதா ஒருங்கிணைத்தார். விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் மேம்பாட்டு பிரிவு, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அறிவியல் இயக்கம் துளிர் மைய ஒருங்கிணைப்பாளர் காமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்