நீட் பயிற்சி அளிக்க உத்தரவு
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க வேண்டும். ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.