உள்ளூர் செய்திகள்

இலவசமாக வழங்கிய நுால்கள் விற்பனை

மதுரை: மதுரை தமுக்கத்தில் அக்., 12 முதல் 10 நாட்கள் மாவட்ட நிர்வாகம், பபாசி சார்பில் புத்தக திருவிழா நடந்தது. இங்கு வருபவர்களிடமும், பதிப்பாளர்களிடமும் இலவசமாக நுால்களை பெற்று, சிறை, ஊர்ப்புற நுாலகங்களுக்கு வழங்க மாவட்ட மைய நுாலகம் சார்பில் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில், நுாலக ஊழியர்கள் ஐவர் தொடர்ச்சியாக பணியில் இருந்தனர். பத்து நாட்களில் 250 நுால்கள் வரை இலவசமாக பெறப்பட்டன. புத்தக திருவிழா நிறைவடைந்த பின், மைய நுாலகத்திடம் அனைத்து நுால்களையும் ஊழியர்கள் ஒப்படைக்கவில்லை. பெரும்பாலான நுால்களை, ஊழியர்கள் பங்கு போட்டு பிரித்துக் கொண்டனர். நுால்களை அவர்கள் எடைக்கு போட்டதாக தகவல் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்