உள்ளூர் செய்திகள்

இந்தாண்டுக்கான சிறந்த பள்ளி தேர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தேகவுண்டன்பாளையம் பள்ளி, இந்தாண்டுக்கான சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு, மாவட்டந்தோறும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி அருகேயுள்ள சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.விருது பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். வரும், 14ம் தேதி சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் விருது வழங்க உள்ளார். பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், இப்பள்ளியின் செயல்பாடுகளை ஆராய்ந்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருது மேலும் ஊக்கத்துடன் செயல்பட வைக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்